தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையின் மன்னராக திகழ்ந்தவர் மறைந்த நடிகர் விவேக். சமூக விழிப்புணர்வையும், நகைச்சுவையையும் சிறப்பாக கலந்து, நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் தனது கதாபாத்திரங்களை நிலைநாட்டியவர். அவருடன் சில படங்களில் இணைந்து நடித்த நடிகை மோகினி, சமீபத்திய ஒரு உரையாடலில் அவரது மீதான நெருக்கம் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்திருக்கிறார்.
நடிகை மோகினி கூறியதாவது, “விவேக் கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடி இருந்து என் கூட நடிச்சிட்டு இருந்தார். ஒரு முறை பேசாம நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்டார். நான் என்ன கிண்டல் பண்ணுறீங்களானு சிரிச்சிட்டேன். அவரு சும்மா தான் கேட்டார், ஆனாலும் நான் சிரிச்சு கவுத்திட்டேன் என்று சொல்லுவார்!”
நடிகர் விவேக் போன்ற நகைச்சுவை மன்னர் குறித்து எந்த நினைவையும் சமூக வலைத்தளங்களில் பகிரும் போது, அது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறுவது இயல்பாகவே இருக்கும். அந்தவகையில் தற்பொழுது வெளியான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!