பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோன், பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள மிகுந்த எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய ‘கல்கி 2898 ஏ.டி.’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து விலகியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டாம் பாகத்தில் தீபிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அப்படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சமீபத்தில் தாயாகிய தீபிகா, தனது மகள் துவாவுடன் நேரம் செலவழிக்க விரும்புவதால், இப்படத்தின் தீவிர வேலை நேர கட்டுப்பாடுகளை ஏற்க முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, படக்குழு தீபிகாவை திட்டதிலிருந்து விலக்க முடிவுசெய்ததாகவும், இரண்டாம் பாகத்தில் அவர் பங்கேற்கவே பாட்டார் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது தீபிகாவின் பதிலுக்கு யார் தேர்வாகப் போகிறார் என்பது குறித்து ரசிகர்களும் திரைப்பட உலகமும் கவனமாகக் காத்திருக்கின்றனர்.
Listen News!