மலையாள திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் 'லோகா', வெளியாகிய 24 நாட்களிலேயே வரலாற்று சாதனை படைத்துள்ளது. நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்த திரைப்படம், ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவான மிகுந்த வெற்றியடைந்த திரைப்படமாக பெயர் பெற்றுள்ளது.
டொமினிக் அருண் இயக்கத்தில் உருவான 'லோகா'வில், சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன், சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக சாண்டியின் வில்லத்தனம், ரசிகர்களிடையே புதிய அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது.
துல்கர் சல்மான் தயாரித்த இந்த படத்தில், கல்யாணியின் உணர்வுபூர்வமான நடிப்பு பெருமளவிற்கு பாராட்டுகளை பெற்றுள்ளது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் சமூக வலைத்தளங்களில் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள்.
வசூல் வரலாற்றில், 'லோகா' திரைப்படம், மோகன்லால் நடித்த 'துடரும்' படத்தின் மொத்த வசூலை 18 நாட்களிலேயே தாண்டி விட்டது. மேலும், 'எம்புரான்' படத்தை 24 நாட்களில் முந்தி, மலையாள சினிமா வரலாற்றில் அதிகம் வசூலித்த திரைப்படமாக திகழ்கிறது.
ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து வெளிவந்த இந்திய திரைப்படங்களில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிக வசூலை பதிவு செய்த படம் 'லோகா' என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!