மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில், ஹனீஃப் அதேனி இயக்கத்தில் வெளியான ‘மார்கோ’ திரைப்படம், கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வித்தியாசமான ஆக்ஷன் காட்சிகளும், தீவிரமான கதையையும் கொண்ட இப்படம், இந்திய சினிமாவில் ஒரு புதிய முயற்சியாக அமைந்தது.
ரவி பஸ்ருர் இசையமைத்த இப்படத்தில், உன்னி முகுந்தனுடன் யுக்தி தரேஜா, சித்திக், ஜெகதீஷ், அபிமன்யு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற இப்படம், ரூ.100 கோடியை கடந்து சாதனை படைத்தது.
இந்த வெற்றியை தொடர்ந்து, 'மார்கோ பாகம் 2' எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது படக்குழு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தொடருக்கு ‘லார்ட் மார்கோ’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சுவாரசியமான தகவல் என்னவெனில், இந்த பாகத்தில் உன்னி முகுந்தன் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக, புதிய ஹீரோவாக யாஷ் நடிக்கவிருப்பதாக தகவல்கள் உறுதி செய்யப்படுகின்றன. இயக்குனர் ஹனீஃப் அதேனியே தொடரும் இந்த படத்தை, க்யூப்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
யாஷின் வருகை, இந்தப் படத்தின் மீது நாடு முழுவதும் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!