• Sep 21 2025

ஜூனியர்என்டிஆர் படப்பிடிப்பு விபத்தில் காயம்!ரசிகர்கள் கவலை வேண்டாம் அதிகாரபூர்வஅறிவிப்பு!

Roshika / 1 day ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர், ஒரு விளம்பர படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்தபோது சிறு விபத்துக்குள்ளாகி காயம் அடைந்தார். இந்த சம்பவம் ஹைதராபாதில் நடைபெற்றது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்த தவறான நிகழ்வால் அவர் சிறிதளவு காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


செய்தி வெளியான சில நிமிடங்களில், தெலுங்கு சினிமா வட்டாரத்தில் இது பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் அவரது உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் பதிலளிக்க தொடங்கினர். இதையடுத்து, ரசிகர்கள் மற்றும் ஊடகங்களில் இருந்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜூனியர் என்டிஆர் தரப்பில் இருந்து அதிகாரபூர்வ விளக்கம் வந்துள்ளது.

அதன்படி, “ஜூனியர் என்டிஆர் இன்று ஒரு விளம்பர படப்பிடிப்பின் போது சிறு காயம் அடைந்தார். மருத்துவ ஆலோசனையின் பேரில், அவர் அடுத்த இரண்டு வாரங்கள் ஓய்வில் இருக்கிறார். அவரது உடல்நிலை முழுமையாக சீராக உள்ளதால் கவலைக்கிடம் எதுவும் இல்லை. ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் தவறான தகவல்களை பகிராமல் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜூனியர் என்டிஆர் விரைவில் மீண்டும் பணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது ரசிகர்கள், விரைவில் அவரை திரையில் மீண்டும் பார்க்க ஆவலாக காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement