• Aug 28 2025

பதிவு திருமணம் செய்து கொள்ள செல்லும் சீதா மற்றும் அருண்...!அங்கு மாலையுடன் வந்த மீனா...!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மனோஜ் ரோகிணியை திட்டுகின்றார்  அதுமட்டுமில்லாமல் பணத்தை எப்படி வாங்க போகின்றாய் என்று கேட்க அதற்கு  ரோகிணி மனோஜ்யை திட்டுகின்றார். என்னை திட்டும் போது சப்போட் பண்ணவில்லை என்று அதற்கு மனோஜ் நீ அம்மாட்ட  பணக்காரவிட்டு பெண்ணு என்று பொய் சொல்லி இருக்கின்றாய் நானும் சப்போட் பண்ண அம்மா என்மீதும்  கோவப்படுவா என்று   கூறினார் .  இப்போது அந்த பணத்தை கொண்டு வந்து  கொடுத்தால்  தான் நிம்மதியாக இருக்க முடியும் என்று கூறி ரோகிணி  மீது கோவப்படுகின்றார் மனோஜ்  .


பின்பு  சீதா அவருடைய அப்பாவின் போட்டோவிடம் " என்னை மன்னுச்சு விடுங்க எனக்கு பிடித்த வாழ்க்கையை தேடிக்க விரும்புவதாக "கூறி அழுகின்றார். அதே போன்று மீனாவும் தூங்கமால் இருக்கின்றார் சீதா போன் பண்ணி தனக்கு பயமாக இருப்பதாகவும் தன்னுடைய அம்மா இல்லாமல் திருமணம் நடப்பது மிகவும் வருத்தாமாக இருப்பதாக கூறி கவலைப்படுகின்றார். எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று கூறி காலையில் வேளைக்கு எழும்ப வேண்டும் போய் தூங்க சொல்லுகின்றார்.


அடுத்து முத்து வேலை முடித்து வந்து தூங்க போது  தன்னை மன்னித்து  விடுங்க என்று மனதில் நினைத்து கொள்கின்றார். அடுத்து சீதா வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு செல்லும் போது அவருடைய அம்மா சாப்பாடு ஊட்டி விடுகின்றார் பின்னர் தந்தையிடம் ஆசீர்வாதம் பெற்று செல்கின்றார். அடுத்தது முத்து மீனாவிடம் கையில் என்ன என்று கேட்க்கும் போது கல்யாணத்திற்கு வந்த ஓடர் என்று சொல்லி விட்டு செல்கின்றார். 


பின்பு சீதாவும் அருணும் பதிவு திருமணம் செய்யும் இடத்தில் இருக்கும் போது மீனா வருகின்றார்கள் அங்கு வந்த மீனா சீதாவிடம் உன்னுடைய திருமணம் எப்படி நடக்க வேண்டியது என்று கூறி கவலை பட்டு கொண்டிருக்கின்றார்கள் அப்போது அவர்களை  வர சொல்லி  அழைக்க செல்கின்றார்கள் இதுதான் இன்றைய எபிசொட்



Advertisement

Advertisement