• Aug 16 2025

அஜித்துடன் லோகேஷ் கனகராஜ் கூட்டணி...!திருப்பத்தை ஏற்படுத்தும் துப்பறியும் திரில்லர்..!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு, அஜித் குமாருடன் நடிக்கும் அடுத்த படம் குறித்த செய்தி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய தகவல்களின்படி, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் படத்தில் அஜித் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது, மேலும் ராகுல் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார். இருப்பினும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.


இதையடுத்து, தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் அஜித்துடன் இணைய உள்ளார் என்ற தகவல் தற்போது உறுதியாகியுள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா ஆகிய முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றியுள்ள லோகேஷ், இப்போது தனது கனவுப் பாணியில் அஜித்திற்கும் ஒரு கதையைச் சொன்னதாக கூறப்படுகிறது.

வன்முறை காட்சிகளுக்கு பிரபலமான லோகேஷ், இந்த முறையோ அதிலிருந்து விலகி, ஒரு துப்பறியும் கதையை உருவாக்கியுள்ளார். இந்த திரில்லிங் கதையின் தன்மை அஜித்துக்கு மிகவும் பிடித்திருப்பதால், உடனே ஒப்புக்கொண்டதாக தகவல்.


தற்போது லோகேஷ் கைதி 2, அமீர்கான் படமும், விக்ரம் 2 ஆகியவற்றில் பிஸியாக உள்ள நிலையில், இவை முடிந்தவுடன் அஜித்துடன் புதிய படப்பணியில் ஈடுபட உள்ளார். இந்த புதிய கூட்டணியால் தமிழ் சினிமாவில் ஒரு புதிய பரிணாமம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement