தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு முக்கியமான திட்டம் தற்காலிகமாக நிலுவையில் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவிருந்த படம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், தற்போது பல்வேறு செய்திகள் திரையுலகில் பரவுகின்றன.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு bankroll செய்ய இருந்த இந்தப் படம், ஆரம்பத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்பட்டிருந்தது. புரொமோ ஷூட்டிங் கூட சில வாரங்களுக்கு முன் நடைபெற்றிருந்தது. ஆனால் தற்போது இந்த படம் "drop" செய்யப்பட்டுவிட்டதாகவும், திட்டம் முற்றிலும் தடைப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
இந்நிலையின் பின்புலத்தில் சம்பள விவகாரம் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ப்ராஃபிட் ஷேர் அடிப்படையில் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் சிம்பு, தற்போது தனது சம்பளத்தை ரூ.45 கோடியாக உயர்த்தியதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஏற்கனவே வெற்றிமாறனுக்காக ரூ.20 கோடி செலவழித்த தயாரிப்பாளர் தாணு, இந்தக் கொள்கை மாற்றத்தை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளதால், படம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் வெளியாகத நிலையில், ரசிகர்கள் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் எதிர்பார்ப்பு மற்றும் குழப்பம் இரண்டும் ஒருங்கே நிலவி வருகிறது.
Listen News!