பான் இந்திய நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகை அனுஷ்கா. இவர் பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் தன் பக்கம் ஈர்த்தார். அதற்கு பின்பு இவர் அதிக படங்களில் நடிக்கவில்லை. தற்போது இவருடைய நடிப்பில் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியான திரைப்படம் தான் காட்டி. இந்த படத்தை கிருஷ் ஜாகர்லமுட இயக்கியுள்ளார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்டம்பர் 5ஆம் தேதி உலக அளவில் ரிலீஸ் ஆன காட்டி திரைப்படம், அனுஷ்காவுக்கு சிறந்த கம்பேக் ஆக காணப்படுகிறது. இந்த படத்தில் பிரபுவின் மகனான விக்ரம் பிரபு அனுஷ்காவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் ஜெகபதி பாபு, ராஜு சுந்தரம், ஜான் விஜய், ஜிஷு சென் குப்தா, லாரிசா போனசி மற்றும் விடிவி கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
சுமார் 50 கோடி பட்ஜெட்டில் காட்டி திரைப்படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் முன்பதிவு வியாபாரம் மட்டும் 52 கோடியை எட்டி உள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் இதன் லாபம் குறைந்த பட்சம் 55 கோடி அல்லது வசூலில் 100 கோடி ரூபாய் வரை தேவை என்றும் விநியோகஸ்தர்கள் கணித்து இருந்தனர்.
இந்த நிலையில், காட்டி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே நான்கு கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்திய அளவில் இரண்டு 2.5 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இரண்டாவது நாளில் 1.4 கோடியை பெற்றதாகவும் கூறப்படுகிறது.
காட்டி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 10 கோடி வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காட்டி திரைப்படம் அந்த அளவை எட்டவில்லை. முதல் நாளை விட இரண்டாவது நாளில் வசூல் குறைந்துள்ளமை தற்போது குறிப்பிடத்தக்கது.
Listen News!