தமிழ் சினிமாவின் நாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் கமல்ஹாசன், சமீபத்தில் நடித்த ‘இந்தியன் 2’ மற்றும் ‘தக் லைஃப்’ படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாத நிலையில், அவருடைய அடுத்த திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த புதிய படத்தில், கமலுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் முதன்முறையாக இணைந்து நடிக்க உள்ளார். இந்தப் படம் RKFI (Raaj Kamal Films International) நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் இரண்டு வயதான கேங்ஸ்டர் கதாப்பாத்திரங்களை மையமாகக் கொண்டு கதை நகரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற சைமா விருது விழாவில் நடிகர் கமல்ஹாசன் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதே விழாவில் நடிகை திரிஷா, கமல்ஹாசனை பார்த்து,"எப்படி சார் இத்தனை வருடங்களாகவும், அதே ஹாட்டாக, கவர்ச்சியாகவும், அழகாகவும் இருக்கீங்க?" என கேட்டதற்கு, கமல் எளிமையாக நன்றி தெரிவித்து ரசிக்கத்தக்க ரியாக்ஷன் அளித்தார். அவரது இந்த பதில் சமூக வலைத்தளங்களில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
ரஜினி-கமல் கூட்டணி, லோகேஷ் இயக்கம், கேங்ஸ்டர் பாக்ட்ராப் என அனைத்தும் சேர்ந்து, இப்படம் தமிழ் சினிமாவில் வரலாறு படைக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
#Trisha: Kamal sir, How are you always so Hot, So Dapper❓#KamalHaasan reaction 😂♥️pic.twitter.com/e5Y6h4gafO
Listen News!