• Aug 08 2025

சிவராஜ்குமாருக்கு வருத்தம் தெரிவித்த கமல்.! பரஸ்பர மரியாதையை வலியுறுத்தும் கடிதம்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் வெளிவந்த ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்வுகளும், அதனை சுற்றிய அரசியல் மற்றும் மொழி விவாதங்களும்,கர்நாடக திரைப்பட உலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்த விவகாரத்தில், குறிப்பாக கர்நாடகாவின் மூத்த நடிகரான சிவராஜ்குமார் இதன் மூலம் சந்தித்த சில சங்கடம் ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.


இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான கமல் ஹாசன், கர்நாடக திரைப்படத் சங்கத் தலைவருக்கு நேரடியாக ஒரு நெகிழ்ச்சியான கடிதத்தை எழுதிக் கொடுத்திருக்கின்றார். அந்தக் கடிதத்தில் கமல், தன்னால் ஏற்படக்கூடிய தவறான புரிதல்கள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்த உருக்கமான கடிதத்தில் கமல் ஹாசன், “நடக்கும் சம்பவங்களால் சிவராஜ்குமார் பல சங்கடங்களை சந்திக்க நேர்ந்தது. மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால் எங்கள் உண்மையான அன்பும் மரியாதையும் எப்போதும் நிலைத்திருக்கும். இப்போது அது மேலும் உறுதியாகும்.” என்று கூறியுள்ளார்.



அத்துடன், “இந்த தவறான புரிதல்கள் தற்காலிகமானவை. நமது பரஸ்பர அன்பையும் மரியாதையையும் மீண்டும் வலியுறுத்த இது ஒரு வாய்ப்பு” என இக்கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இத்தகவல்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement