• Aug 08 2025

பிரபாஸ் நடிப்பில் வெளியாகும் "ராஜாசாப்"...! படக்குழு வெளியிட்ட புது அப்டேட்...!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் தனது நடிப்பின் மூலம் தனி ரசிகர் பட்டளாத்தை கொண்டிருக்கின்றார். "கல்கி" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியிலும் சாதனை படைத்து இருந்தது.  தற்போது "தி ராஜாசாப்" திரைப்படம் வெளியாகும் திகதி குறித்து அறிவிப்பைவிடுத்துள்ளது. 


மாருதி இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.மேலும் எஸ் தமன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், ஹிந்தி, தெலுங்கு,மலையாளம்,கன்னடம் எனப் பல மொழிகளில் வெளியாகும் என எதிர் பார்க்கபடுகின்றது. 


இந்நிலையில் படத்தின் ரிலீஸ் திகதி குறித்து படக்குழு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.அதாவது டிசம்பர் 5 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பிரபாஸ் நடிக்கும் ஒவ்வெரு படமும் வித்தியாசமான கதை களத்தை கொண்டிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 




  

Advertisement

Advertisement