• Sep 21 2025

திமுகவோடு கூட்டணி இணைந்தன் காரணம் என்ன தெரியுமா?கமல்ஹாசனின் விளக்கம்...!

Roshika / 2 days ago

Advertisement

Listen News!

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் மற்றும் மக்களவை உறுப்பினர் திரு. கமல்ஹாசன், வருகிற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபைத் தேர்தலையொட்டி கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார். இந்தத் திட்டமிடல் கூட்டங்கள் செப்டம்பர் 18 முதல் 21 ஆம் தேதி வரை, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெறுகின்றன.


முதல்நாளான இன்று காலை சென்னை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த கமல்ஹாசன், மாலை நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தினரைச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். நாளை காலை கோவை, மாலை மதுரை, நாளை மறுநாள் காலை நெல்லை மற்றும் மாலை திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெறவுள்ளது. 21ஆம் தேதி காலையில் விழுப்புரம், மாலை நேரத்தில் சேலம் மற்றும் புதுச்சேரி மண்டல நிர்வாகிகளுடன் முடிவடைகிறது இந்த ஆலோசனைச் சுற்றுப்பயணம்.


இந்த சந்திப்புகளில், எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் ம.நீ.மை. எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும், மக்களிடையே கட்சியின் செல்வாக்கு எவ்வாறு உள்ளது, மற்றும் கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பவற்றைப் பற்றிய கருத்துகளை கமல்ஹாசன் கேட்டறிந்து வருகிறார்.

நிர்வாகிகளுடன் பேசிய கமல்ஹாசன், "திமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டோம் என்பதற்காக சிலர் எங்கள் மீது விமர்சனங்கள் வைக்கிறார்கள். நீதிக்கட்சியில் இருந்து தான் திமுக உருவானது. அதேபோல, நம் கட்சி பெயரிலேயே 'நீதி' என்பதே இருக்கிறது. இது எளிதாக அநாகரிகமாக பேசக்கூடிய விஷயம் அல்ல," எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், “ஆசியாவிலேயே மையவாதக் கொள்கையை பின்பற்றும் ஒரே கட்சி மக்கள் நீதி மையம் தான். நாட்டை இடது, வலது என பிரித்து பார்ப்பதை நாம் மறுக்கிறோம். மக்களுக்கே முக்கியத்துவம் என்று நாங்கள் நம்புகிறோம்,” என வலியுறுத்தினார்.

ம.நீ.மை. தலைவர் கமல்ஹாசனின் இந்த நேரடி ஆலோசனைச் சுற்றுப்பயணம், கட்சியின் பூரண ஈடுபாடும், சுயவலிமை வளர்ச்சி திட்டங்களும் முக்கியமாக கருதப்படும். வருகிற சட்டசபை தேர்தலில், மக்கள் நீதி மையம் எவ்வகையான இடத்தை பிடிக்கப்போகிறது என்பதை இந்தக் கூட்டங்கள் தீர்மானிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு கட்சியில் நிலவுகிறது.

Advertisement

Advertisement