• Sep 21 2025

'டிராகன்' பட நடிகை இப்படி மாறிட்டாங்களா.? அனுபமாவின் புதிய புகைப்படங்களைப் பாருங்க.!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளத்தில் ஆரம்பித்த தனது திரைப்பயணத்தை, தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவிலும் வெற்றிகரமாக பரப்பியுள்ள அனுபமா, தற்போது தனது ஃபேஷன் சென்ஸையும் தனது சினிமா நடிப்பிற்கேற்ப வளர்த்து வருகிறார்.


இந்நிலையில், சமீபத்தில் அனுபமா பரமேஸ்வரன் மாடர்ன் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், இணையத்தில் வேகமாக வைரலாக பரவி வருகின்றன. இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையில் புதிய கவனத்தைக் கொண்டு சென்றுள்ளது.


இவர் தமிழில் 'கொடி' மற்றும் 'சைரன்' போன்ற படங்களில் தனது அசத்தலான திறமையை காட்டியிருந்தார். இவ்விரு படங்களிலும் அவர் காட்டிய திறமையான நடிப்பும், அழகும், ரசிகர்களின் மனதில் முத்திரையை பதித்தது.


சமீபத்தில் வெளியான தெலுங்கு திரைப்படமான 'ட்ராகன்', விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தில் அனுபமா நடித்த முக்கியமான கேரக்டர், அவரது திரையுலகப் புகழுக்கு புதிய உயரத்தை வழங்கியது.

தற்பொழுது அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்கள், அவரது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த புகைப்படங்களில் அவர் மாடர்ன் டிரெஸ்ஸில், மிகுந்த அழகுடன் காட்சியளிக்கிறார்.

Advertisement

Advertisement