• Sep 21 2025

கமல் ஹாசன் கைவசம் இருக்கும் மூன்று மெகா படங்கள்..! வைரலான தகவல்கள் இதோ.!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் ‘உலக நாயகன்’ என்ற பெருமையை தக்கவைத்திருக்கும் கமல் ஹாசன், தற்போது மீண்டும் திரைப்பட உலகில் பிஸியாக இருக்கிறார். அரசியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சினிமா என பன்முகப்பாடுகளில் திகழும் அவரிடம், தற்போது பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், பெரிய நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.


அதன் சாட்சியாக, கமல் ஹாசன் கைவசம் வைத்திருக்கும் புதிய திரைப்படங்களின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. இதில் தனித்துவமான படைப்புகளும், மாஸான திருப்பங்களும், ரீயூனியன் கூட்டணிகளும் இருக்கின்றன.

அந்தவகையில், சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் ஒன்று. அதிரடி மாஸ்டர் அன்பறிவு இயக்கத்தில் ஒன்று. அத்துடன் RKFI Red Giant கூட்டணியில் சூப்பர் ஸ்டாருடன் reunion படத்திற்காகவும் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இவை மூலமாக, எதிர்வரும் ஆண்டுகளில் கமல் ஹாசன் மீண்டும் தனது அசத்தலான நடிப்பை வெளிக்காட்டவுள்ளார் என்பதனை அறியமுடிகிறது.கலையை நேசிக்கும் அரசியல் நாயகனாகவும், சிந்தனையோடும், செயற்பாடோடும் இயங்கும் நடிகராகவும் கமல் ஹாசன் தொடரும் பயணம், தற்போது புதிய இயக்குநர்கள், புதிய கூட்டணிகள், புதிய முயற்சிகள் மூலம் மேலும் விரிவடையவுள்ளது.


Advertisement

Advertisement