• Jul 13 2025

ராஜசபா எம்பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்...!அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு...!

Roshika / 8 hours ago

Advertisement

Listen News!

தமிழ்  சினிமாவின் முன்னணி நடிகராக வலம்  வருபவர் கமல் ஹாசன் இவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார்.மேலும் தற்போது அரசியலிலும் கால் பதித்துள்ளர்.  மக்கள் நீதி மையம் (MNM) கட்சியின் தலைவராக செயற்பட்டு வருகின்றார். திரு. கமல்ஹாசன் ஜூலை 25ஆம் தேதி ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்க உள்ளார் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அவரது அரசியல் பயணத்தில் முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது.


தமிழகத்தில் ஆறு ராஜசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், புதிய உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்வு ஜூலை 25 அன்று நடைபெற உள்ளது. திமுக சார்பில் மூன்று பேர்  திரு. எஸ்.ஆர். சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் மக்கள் நீதி மையம் தலைவர் திரு. கமல்ஹாசன்  ஆகியோர் தேர்வாகியுள்ளனர். 


மக்கள் நீதி மையத்தின் சார்பில் முதன்முறையாக கமல்ஹாசன் ராஜசபாவில் அங்கீகாரம் பெறுவது குறிப்பிடத்தக்கது. இவர் அரசியலுக்குள் நுழைந்ததிலிருந்து சமூக நீதி, கல்வி, மருத்துவம் மற்றும் நேர்மையான நிர்வாகம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். இந்நிலையில், பாராளுமன்ற மேடையில் அவரின் குரல் ஓங்கும் வாய்ப்பு கிடைப்பது அவரது கட்சி வளர்ச்சிக்கும் முக்கியத்துவம்  வாய்ந்ததாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.


ஜூலை 25 அன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியக் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என எதிர்பார்க்கபடுவதுடன்  ரசிகர்களும் தங்கள் ஆதரவுகளை வழங்குவார்கள் என்று எதிர் பார்க்கபடுகின்றது. 


Advertisement

Advertisement