• Jul 12 2025

சிவகார்த்திகேயனின் மகன் குகன் பிறந்த நாள் இன்று.!ஆர்த்தி பகிர்ந்த இனிய புகைப்படம் வைரல்..!

Roshika / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தனது தொடர்ந்து வெற்றிகரமான படங்களின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்துவருகிறார். சமீபத்தில் வெளியான வாழ்க்கை வரலாற்றுப் படம் 'அமரன்', ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்து அவரது திரை பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக மாறியுள்ளது.


தற்போது, அவரின் அடுத்த இரு திரைப்படங்கள் 'மதராஷி' (முருகதாஸ் இயக்கத்தில்) மற்றும் 'பராசக்தி' (சுதா கொங்கரா இயக்கத்தில்) வெளியாக உள்ள நிலையில், மேலும் இயக்குநர்கள் வெங்கட் பிரபு மற்றும் 'குட்நைட்' புகழ் விநாயக் சந்திரசேகரனுடன் புதிய படங்களுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நடப்பு திரையுலக நிகழ்வுகளுக்கு இடையே, இன்று அவரது மகன் குகன் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதை ஒட்டி, சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி, தனது சமூக வலைதள பக்கத்தில் மகனுடன் எடுத்த ஒரு இனிமையான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.


அந்த புகைப்படத்தில் குகனின் முகத்தில் குழந்தை like ஆன மகிழ்ச்சி பிரகாசமாக தெரிகிறது. ஆர்த்தியின் முகத்தில் ஒரு தாயின் பாசமும், பெருமையும் தெளிவாக பிரதிபலிக்கிறது. புகைப்படத்துடன், “என் குட்டி குகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். உன் சிரிப்பே எங்களின் வாழ்வின் ஒளி. எப்போதும் நீ சந்தோஷமாக இருக்க வேண்டும்!” என்ற பதிவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவிற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களிடமிருந்து வாழ்த்துக்கள் மழை பொழிந்துகொண்டு வருகிறது.



Advertisement

Advertisement