நேற்றைய தினம் (24-08-2025) சென்னை நகரில் மிகவும் விமர்சையாக நடைபெற்ற ‘மதராஸி’ திரைப்பட இசை வெளியீட்டு விழா வெகு முக்கியமான நிகழ்வாக அமைந்தது. இதில் கலந்துகொண்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், விழா மேடையில் நிகழ்த்திய உரை தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாக பரவி வருகிறது.
இந்த விழாவின் போது SK, தளபதி விஜய் பற்றிய ஒரு சுவாரஸ்யமான மற்றும் நேர்மையான கருத்தை பகிர்ந்தார். இதுதான் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய டிஸ்கஷனாக மாறியிருக்கிறது.
விழாவின் போது பேசிய சிவகார்த்திகேயன், "தளபதி விஜய் சாரின் ரசிகர்களை நான் திருட முயற்சிக்கிறேன் என்று பலர் சொல்கிறார்கள். ஆனால், ரசிகர்கள் ஒரு பரிசு அல்ல. அதை யாராலும் திருட முடியாது." என்றார்.
மேலும், " ரஜினி சார் , கமல் சார், அஜித் சார், சூர்யா சார், சிம்பு சார் மற்றும் தனுஷ் சார் ஆகியோர் பல வருடங்களாக ஒரு ரசிகர் பட்டாளத்தை சம்பாதிக்க கடுமையாக உழைத்தனர். நான் இன்னும் என் ரசிகர்களை சம்பாதித்து வருகிறேன்." எனவும் கூறியுள்ளார்.
இது போன்ற நேர்மையான, நியாயமான கருத்தை நடிகர் ஒருவர் நேரடியாக மேடையில் பகிர்ந்து கொண்டது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. SK-யின் இந்த பேச்சு விஜய் ரசிகர்களிடையே கூட பாசம், மதிப்பு ஆகியவற்றை உருவாக்கியுள்ளது.
Listen News!