• Aug 03 2025

ரோமானியாவில் பைக் ரேஸ்சில் கலக்கும் அஜித் ...!வைரலாகும் வீடியோ...!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித், பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை வென்றுவருகிறார். அவரது நடிப்பின் தனித்துவம் காரணமாக  அவர் பல ரசிகர்களின் முதல் விருப்பமாக இருக்கிறார். அஜித், திரையுலகத்துடன் மட்டுமல்லாமல், கார் மற்றும் பைக் ரேஸ் போன்ற துறைகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 


தற்போது  சமீபத்தில் ரோமானியாவில் அஜித்குமார்  வெளியிட்ட  பைக் ரேஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், அஜித் தனது பைக் ஓட்டும் திறமையை வெளிப்படுத்தியுள்ளானர். அதிரடியான ஸ்பீடு மற்றும் திறமையுடன் பைக்கில் சவால்களை ஏற்றுக்கொண்டு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.


 ரோமானியாவின் அழகான பாதையில்  நிகழ்ந்த இந்த பைக்ரேஸ் அனுபவம் அஜித்தின் ரசிகர்களுக்கு புதிய திருப்தியை அளிக்கிறது. அவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டுவருவதுடன் , ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் இந்த அசாதாரண நட்சத்திரம், தனது தனிப்பட்ட ஆர்வங்களை பகிர்ந்து, ரசிகர்களுடன் மேலும் நெருக்கமான உறவை ஏற்படுத்தி வருகிறார். அஜித்தின் இந்த புதிய முயற்சி, அவரின் ரசிகர்களிடையே பெரிய ஆதரவையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement