இந்திய திரைப்படங்களின் தலைப்புகள், கதைகள், மற்றும் சஸ்பென்ஸ் அம்சங்கள் வாடிக்கையாகவே சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது விவாதத்திற்கு இடமளித்திருக்கும் திரைப்படம் தான் Janaki Vs State Of Kerala.
இந்த படத்தில் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி முக்கிய வேடத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வன்கொடுமைகள், பெண்ணுக்கு நேரும் நியாயமற்ற சம்பவங்கள், சட்டத்தின் செயல்பாடுகள் உள்ளிட்ட சமூக நியாயங்கள் குறித்து பேசும் இந்த படத்தின் தலைப்பே தற்பொழுது சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது.
இந்த படத்தின் தலைப்பு "Janaki Vs State Of Kerala" என்பதிலேயே வன்கொடுமைகளை பிரதிபலிக்கும் என்பது தெரியவந்துள்ளது. இதனாலேயே, ஜானகி என டைட்டில் வைக்க சென்சார் போர்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனால் ஜூலை 5 நீதிபதி நாகரேஷ் படத்தைப் பார்வையிடவுள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் அனைவரும் கேரள நீதிமன்றத்தின் தீர்ப்பிற்காக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
Listen News!