விஜய் சேதுபதி கடந்த ஆண்டு ‘மகாராஜா’ மற்றும் ‘விடுதலை 2’ படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான ‘தலைவன் தலைவி’ படத்தில் நித்யா மேனன் ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா இயக்குநர் அனல் அரசுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இத்திரைப்படம் ஜூலை 4ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
இந்த படத்துக்காக தனது உடலை கட்டுமஸ்தாக மாற்றி உருவெடுத்த சூர்யா அதற்காக செய்த உடற்பயிற்சி மற்றும் மாற்றங்களை பற்றிய வீடியோவை அவரது பர்சனல் ட்ரெயினர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் நடித்துள்ள படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Listen News!