• Jul 03 2025

புதிய சீரியலுக்கு தாவிய "சிறகடிக்க ஆசை" சீரியல் ரோகிணி..! அதுவும் எந்த சேனல் தெரியுமா.?

subiththira / 16 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை உலகத்தில் தற்போது அதிக கவனத்தைப் பெறும் சீரியல் என்றால் அது விஜய் டீவியின் "சிறகடிக்க ஆசை" தான். குடும்ப கலகலப்பும், காதலும், உணர்வுகளும் கலந்து வரும் இந்த தொடரில் முக்கியமான எதிர்மறை பாத்திரமாக ரோகிணி எனும் கதாபாத்திரம் இருப்பது அனைவரும் அறிந்ததே.


இந்த ரோகிணியாக காட்சியளிக்கிறவர் தான் நடிகை சல்மா அருண். சீரியலில் இடையூறாக, குடும்பத்தை சிதைக்கும் வகையில் நடந்து கொண்டாலும், நிஜ வாழ்க்கையில் அவர் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றவர். அவருடைய வேடம், குரல் நயம், முகபாவனை, அனைத்தும் வில்லி கதாபாத்திரத்துக்கு perfect match என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகிறார்கள்.

'சிறகடிக்க ஆசை' தொடரில் ரோகிணியின் நாடகத்திற்கும் பொய்களுக்கும் எப்போது ஒரு முடிவு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தே இருக்கிறார்கள். "ரோகிணி எப்போது வசமாக சிக்குவார்..." என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்துகள் தெரிவிக்கும் அளவுக்கு ரோகிணி என்ற பாத்திரம் சிறப்பாக அமைந்திருந்தது.


'சிறகடிக்க ஆசை' தொடரின் வெற்றியை தொடர்ந்து, நடிகை சல்மா அருண் தற்போது சன் டீவியின் புதிய தொடரான 'வினோதினி'யிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார். இதற்கான புரொமோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. 'வினோதினி' தொடரில், சல்மா ஹீரோவின் மனைவியாக காட்சியளிக்கிறார். ஆனால், இதில் ஒரு இரகசியம் இருக்கிறது. அது என்னவென்றால் இது பிளாஷ்பேக் காட்சிகளாக மட்டுமே வரவிருக்கிறது. அதாவது, அவர் முன்னாள் வாழ்க்கை சம்பந்தமான கதாபாத்திரங்களிலேயே வரவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement