• Jul 23 2025

நான் வந்ததால தான் பிரச்சனையா.? நான் என்ன angel-ஆ.! கெனிஷாவின் அதிரடிக் கருத்து.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அழகான தோற்றத்தோடு, தனக்கென தனித்துவமான பாணியில் ரசிகர்களிடையே இடம் பிடித்து வருபவர் கெனிஷா. சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் கெனிஷா மற்றும் நடிகர் ரவிமோகன் தொடர்பான சில தகவல்கள் பரபரப்பாக வெளியான நிலையில், தற்போது கெனிஷா ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு, உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.


இந்த நேர்காணல் பலரிடமும் பெரும் பாசிட்டிவ் மற்றும் சர்ச்சைத் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. நேர்காணலில் அவர் முதலில் எடுத்துக்காட்டிய விடயமாக தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய நிம்மதியான நிலை காணப்படுகின்றது.

அதன்போது, “நான் இப்போது என் வேலையில் மட்டும் focus ஆக இருக்கிறேன். என்னைப் பற்றி யார் என்ன சொல்றாங்கன்னு பாத்துகிட்டு வாழமுடியாது. நான் என்ன செய்யனும் என்று எனக்கு தெரியும். மற்றவங்க சொல்லுறத என்னால கேட்க முடியாது.,” எனவும் தெரிவித்தார்.


சமூக வலைத்தளங்களில் சிலர் கெனிஷாவை குறித்த விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். அதற்கு அவர், “என்னைப் பற்றி யாரும் பேசாமல்...அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கு, அவர்களது வீட்டில் எவ்வளவு happiness இருக்கு என்பதைப் பாருங்க. ஏனென்றால், ஒரு மனசு சந்தோஷமா இருந்தா, அது இன்னொருவரைப் பற்றி பேச நேரம் தராது.” என்று பதிலளித்திருந்தார்.

இதுவரை நடிகர் ரவிமோகன் தொடர்பாக நேரடியாகப் பேசாமல் இருந்த கெனிஷா, தற்போது அந்த விவகாரத்தையும் கதைத்துள்ளார். “ஒரு celebrity ஆக இருக்கிறதால தான் இவ்வளவு நடக்குது. அவருடைய வாழ்க்கையில் பிரச்சனை வந்தது தான்... ஆனா அதுக்கு காரணம் நான் வந்ததுன்னா, நான் என்ன Angel ஆ? நான் வந்ததால தான்  கஷ்டப்படுறாங்கன்னு சொல்லுறதுக்கு.” எனவும் கூறியிருந்தார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement