• Apr 15 2026

கொளுத்துடா பட்டாச.. 'இந்தியன் 2' படத்தின் ரிலீஸ் தேதி கன்போர்ம் ? ஆனாலும் வெயிட் பண்ணுமாம்..! புதிய அப்டேட்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியன் 2 பாகத்திற்கான படப்பிடிப்பு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்த நிலையில், கொரோனா பிரச்சினை காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 

இதனால் இப்படம் பல சர்ச்சைகளில் சிக்கியது. இதை தொடர்ந்து ஷங்கர் படப்பிடிப்பை அண்மைக்காலமாக நடத்தி வந்தார். இதனால் விரைவில் ஒட்டுமொத்த படத்தின் படப்பிடிப்பும் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.


கமல் தற்போது மணிரத்தினம் இயக்கும் தக் லைஃப்  படத்தில் நடித்து வருகிறார். சென்னையின் தொடங்கிய ஷூட்டிங் தற்போது செர்பியாவில் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பிஸியாக இருப்பதால் செர்பியாவில் நடைபெறும் தக் லைஃப் ஷூட்டிங்கில் கமல் கலந்து கொள்ளவில்லை. அதே காரணத்துக்காக தான் தற்போது இந்தியன் 2 பற்றி அறிவிக்கப்படாமல் இருந்தது.


இவ்வாறான நிலையில் இந்த படம் மே 24ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஹோலிவுட் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்தியன் 2 படத்திற்கு ரிலீஸ் தேதியை படக்குழு அதிகார்வ பூர்வமாக அறிவிக்கும் என கூறப்படுகிறது.

இதன் காரணத்தினால் கமல் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளதோடு விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement