• May 16 2026

அந்த ஷோ எல்லாம் நான் பார்க்கிறதே இல்லை,போனதே வேஸ்ட்- பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கழுவி ஊற்றிய ஜனனி

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வாகியுள்ளாராம்.இரண்டாம் இடத்தை மணியும் மூன்றாம் இடத்தை மாயாவும் பெற்றுக் கொண்டுள்ளனர்.இதன் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி இன்றைய தினம் ஒளிபரப்பப்படவுள்ளது.

கடந்த சில வாரங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த பேச்சுக்கள் தான் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.எனவே பிரபல நடிகையும் பிக்பாஸ் சீசன் 2 இன் பிரபலமுமான ஜனனியிடம் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார் என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் கேள்விகளையும் பத்திரிகையாளர்கள் எழுப்பியிருந்தனர்.


அதற்கு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நான் வெளியே வந்தற்கு பிறகு அந்த நிகழ்ச்சியை பார்ப்பதே கிடையாது என்றும் அந்த நிகழ்ச்சியை பார்க்க புடிக்கவில்லை என்றும் பதில் அளித்துள்ளார். 


 பிக்பாஸுக்கு பிறகு ஒன்றும் பெரிய மாற்றம் இல்லை என்றும் அதற்கு முன் எப்படி பட வாய்ப்புகள் கிடைத்ததோ அதே எண்ணிக்கையில் தான் இப்போதும் பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன என பளிச்சென்று கூறியுள்ளார்.ஜனனி தெகிடி, அதே கண்கள், பலூன், முப்பரிமாணம், தர்ம பிரபு, வேழம், பஹீரா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement