• Apr 17 2026

அமீர்கானின் மகளது திருமண வரவேற்பு விழாவில் படுமாஸாக கலந்து கொண்ட நடிகர் சூர்யா- வைரலாகி வரும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் திரையுலகில் முக்கியமான நடிகர் தான் அமீர்கான்.இவருக்கு ஈரா கான் என்ற மகள் உள்ளார்.ஈராகானுக்கு கடந்த 3ம் தேதி மும்பையில் திருமணம் நடந்தது. ஈரா கான் மற்றும் நூபுர் ஷிகாரே ஆகிய இருவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் ஜனவரி 13ஆம் தேதி விமர்சையாக அவருடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் உலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.


 அதேபோல தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா அவர்கள் இந்த திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். கருப்பு நிற ஆடை அணிந்து அவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.


 அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.மேலும் ஜோதிகா வரவில்லையா என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement