• Apr 16 2026

அயலான் படம் எப்படி உள்ளது- வெளியாகிய முதல் விமர்சனம்- அடடே இது தான் கதையா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன்.இக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.அயலான் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் 12ம் தேதி ரிலீஸாகிறது.

இந்தப் படம் ஏலியன்ஸை பின்னணியாக வைத்து சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ளது. இதுதான் இந்திய சினிமாவில் முதல் ஏலியன்ஸ் படம் என்பதும் முக்கியமாகும்.


இந்த நிலையில் அயலான் படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அயலான் கண்டிப்பாக ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகும் என்றாலும் படத்தில் சில மைனஸ்கள் இருப்பதும் உறுதியாகியுள்ளது. இந்தியாவில் விவசாயத்தை சீரழிக்க வில்லன் கும்பல் ஒரு ஏலியனை பூமிக்கு அனுப்புகிறது. சிவகார்த்திகேயனிடம் தஞ்சமடையும் அது, பின்னர் வில்லன்களின் சூழ்ச்சியில் இருந்து தப்பித்ததா என்பது தான் கதை.

மேலும் சிவகார்த்திகேயனும் பூமிக்கு வந்த ஏலியனுடன் சேர்ந்து வில்லன்களுடன் மோதுகிறார். இறுதியாக என்ன நடந்தது என்பதை செம்ம ஜாலியான என்டர்டெயினிங் படமாக உருவாகியுள்ளாராம் ரவிக்குமார். படம் முழுக்க கிராபிக்ஸ் வேலகளில் ஷங்கர், ராஜமெளலி போன்ற ஜாம்பவான் இயக்குநர்களையே ரவிக்குமார் ஓவர்டேக் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. 

இப் படத்தின் முதல் பாதி சுமாராக சென்றாலும், இடைவேளைக்குப் பின்னர் மிரட்டலாக உள்ளதாம். இதனால் இரண்டாம் பாதி தாறுமாறாக இருக்கிறது எனவும், திரைக்கதையிலும் இயக்குநர் ரவிக்குமார் மிரட்டிவிட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவகார்த்திகேயன் நடிப்பு மட்டும் இல்லாமல் ஆக்‌ஷன் காட்சிகளிலும் செம்ம மாஸ் காட்டியுள்ளாராம். 


ஆனால், ஏஆர் ரஹ்மானின் இசையில் பாடல்கள் மட்டும் ஒர்த்தாக இல்லை என நெகட்டிவான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் ஏலியனுக்கு சித்தார்த் டப்பிங் கொடுத்துள்ளதும் ரசிக்கும் படி உள்ளதாம். சிவகார்த்திகேயன், யோகி பாபு, கருணாகரன் கூட்டணியில் காமெடியும் கை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement