• Aug 19 2025

ராப் பாடகர் வேடன் தலைமறைவு...!கைது செய்ய இடைக்கால தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Roshika / 2 hours ago

Advertisement

Listen News!

பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து கேரளா உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் பொலிஸார் வேடனுக்கு எதிராக POCSO சட்டம் உட்பட பல்வேறு கடும் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வேடன் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.


இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, வேடன் தற்போது தலைமறைவாக இருப்பதையடுத்து, நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனு விசாரணையை ஒத்திவைத்தது. மேலும், அவரை கண்டுபிடிக்க லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கபொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த சூழ்நிலையில், பொலிஸார் வேடனை கைது செய்ய திட்டமிட்டுள்ளதை அறிந்து, அவருடைய வழக்கறிஞர்கள் அவசர வழக்கு தொடர்ந்தனர். அதில், தற்காலிகமாகவே கைது செய்வதைத் தடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.


இதையடுத்து, நீதிமன்றம் வேடனை கைது செய்ய இடைக்கால தடை விதித்து, வழக்கின் அடுத்த விசாரணையை வரை நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் நாட்களில் நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement