31 ஜூலை 2025 அன்று பான் இந்தியா ரிலீஸாக திரையரங்குகளை வந்தடைந்த விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்' படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் அதிரடியான தொடக்கத்தைக் காட்டியுள்ளது.
‘கிங்டம்’ என்பது ஒரு நிஜ சம்பவங்களால் உருவாக்கப்பட்ட ஆக்ஷன்-த்ரில்லர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா தனது திறமையான நடிப்பினைக் காட்டியுள்ளார். மேலும், அண்மையில் ஹிட் பாடல்களின் வரிசையில் பிஸியாக இருந்த இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், 'கிங்டம்' படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் கௌதம் தின்னனூரி இயக்கியுள்ள இந்த படம், முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 15.5 கோடி வசூலை குவித்து, விஜய் தேவரகொண்டாவிற்கு மீண்டும் ஒரு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.
Listen News!