சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் நடிகர் பரத் அபார வெற்றியுடன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ‘சின்னத்திரை வெற்றி’ அணியின் சார்பில் போட்டியிட்ட அவர், 491 வாக்குகளை பெற்று மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளார்.
இந்தத் தேர்தலில் மொத்தம் நான்கு அணிகள் போட்டியிட்ட நிலையில், 1600 தகுதி பெற்ற உறுப்பினர்களில் 859 பேர் நேரில் வாக்களித்தனர். மேலும், 7 தபால் வாக்குகளும் பதிவாகியிருந்தன. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
தேர்தல் முடிவுகள் வெளியாகியவுடன், பரத்தின் ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சின்னத்திரை உலகில் பரதுக்கு இருக்கும் வலுவான ஆதரவை இது ஒருமுறையும் நிரூபிக்கிறது. புதிய தலைவராக பரத் பொறுப்பேற்பதால், சங்கத்திற்குள் புதிய மாற்றங்கள், புதிய முயற்சிகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர்களின் நலன், தொழில்முறை மேம்பாடு மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் பரத்தின் செயல்பாடுகள் எதிர்நோக்கப்படுகின்றன.
Listen News!