• Sep 12 2025

அஜித்–ஷாலினியின் காதல் எங்கு துவங்கியது தெரியுமா? இன்ஸ்டாவில் வைரலான போட்டோஸ்..!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் most popular couple என்று சொல்லப்படக்கூடிய ஜோடி தான் அஜித் குமார் மற்றும் ஷாலினி. இருவரும் "அமர்க்களம்" திரைப்படத்தில் ஒரே ஸ்கிரீனில் இணைந்த போது, வெறும் நடிகர் நடிகையாக இருந்து, பின்னாளில் வாழ்க்கை துணையாக மாறியிருந்தனர். 


இப்போது, அந்த அழகான காதல் தருணங்களை நமக்குக் காட்டும் வகையில், ‘அமர்க்களம்’ படக்குழு சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில், குறிப்பாக Instagram-இல் வேகமாக வைரலாகி வருகின்றது.


1999ம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில் அஜித் ஸ்டைலிஷ் ஹீரோவாக புது தோற்றத்தில் காட்சியளிக்க, ஷாலினி நுட்பமான நடிப்புடன் தனது இடத்தை உறுதிப்படுத்தி இருந்தார். இதே நேரத்தில், இருவருக்குள் அந்த படத்திலிருந்து உருவான காதல் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியது.


அந்தவகையில் தற்பொழுது வெளியான புகைப்படங்கள் வெளியாகி சில மணிநேரங்களிலேயே இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான லைக், கமெண்ட்ஸினைப் பெற்று வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement