• Jun 29 2025

சூர்யா "வாடிவாசல் " படத்திற்கு நோ சொன்னாரா..? drop ஆகுமா ? இல்லையா ?

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா ரெட்ரோ திரைப்படத்தின் பின்னர் வெங்கி அட்லூரி படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இப் படத்தின் பூஜை முடிவடைந்துள்ள நிலையில் படப்பிடிப்பு பணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கவுள்ளார். மேலும் ஏற்கனவே அறிவித்தது போன்று வெற்றிமாறன் இயக்கத்தில் "வாடிவாசல் " திரைப்படம் ஆரம்பிக்கவுள்ளதாக தயாரிப்பாளர் தாணு கூறி இருந்தார்.


இந்த நிலையில் ஓரளவு கதை ஆரம்பிச்சு முடிவு script சூர்யாவிடம் வெற்றிமாறன் கொடுத்துள்ளார். அதில் இவருக்கு பெரிதும் ஈடுபாடு இருப்பது போன்று தெரியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பட வேலைகள் ஆரம்பிப்பது சூர்யாவின் கையில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதைவிட சூர்யாவின் லைன் அப்பில் லோகேஷ் கனகராஜின் rolex திரைப்படம் மற்றும் இரும்புக்கை மாயாவி போன்ற இரண்டு படங்கள் இருப்பதாகவும் இரண்டில் ரசிகர்கள் மற்றும் நட்பு வட்டாரங்கள் விருப்பப்படி சூர்யா rolex படத்திற்கு ok சொல்லுவார் என செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

Advertisement

Advertisement