• Jul 20 2025

" அஜித் தான் எல்லாருக்கும் முன் உதாரணம்.." பிரபல நடிகை உருக்கம்..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

அதிக ரசிகர் கூட்டத்தை கொண்ட நடிகர் அஜித் தற்போது கார் ரேசிங்கில் மிகவும் பிசியாக கலந்து வருகின்றார். மேலும் அண்மையில் இவருக்கு இந்திய அரசாங்கம் பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. இந்த நிலையில் சாதாரண ரசிகர்கள் மாத்திரமின்றி சினிமா பிரபலங்களும் ரசிகர்களாக இருக்கின்றனர். மேலும் இவர் குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து அடுத்த ஆண்டு படம் நடிக்க இருப்பதாக கூறி இருந்தார்.


இந்த நிலையில் தற்போது நடிகை கௌதமி அஜித் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த பேட்டியில் " ஆரம்ப காலகட்டத்தில் என் வீட்டின் அருகில் தான் அஜித் வேலை பார்த்துக் கொண்டிருந்தாராம். இதை அவர்தான் என்னிடம் ஒருமுறை சொன்னார். இன்று அஜித் சினிமாவிலும் விளையாட்டிலும் ஜெயித்ததை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. அவர் குடும்பம், சினிமா, விளையாட்டு என தனித்தனியாக பிரித்து எல்லாவற்றிலும் வெற்றி பெறுகிறார். அவர் உழைத்து முன்னேற வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கிறார்" என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement