• Jul 27 2025

"Dear Comrade " இன்றுடன் 6 ஆண்டு நிறைவு...!ராஷ்மிகா மந்தனா பகிர்ந்த ஷூட்டிங் போட்டோஸ்..!

Roshika / 12 hours ago

Advertisement

Listen News!

இயக்குனர் பாரத் கம்மா இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘டியர் காம்ரேட்’ திரைப்படம் இன்றுடன் வெளியானது 6 ஆண்டுகளை complete செய்துள்ளது. ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான இந்த திரைப்படம், பின்னர் மெகா ஹிட்டாக மாறி அனைவரையும் ஆச்சரியப்பட செய்தது.


நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்த படம், காதல், அரசியல், சமூக நீதி போன்ற பல அம்சங்களை சுட்டிக்காட்டியது. ஒரு பெண் கிரிக்கெட் வீராங்கனையாக ராஷ்மிகா தனது கனவுகளுக்காக போராட, அவளுக்கு துணையாக நின்ற நாயகனின் பயணமே இப்படத்தின் முக்கியச் சொல்.


நவீன் ஏர்னெனி தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்த பாடல்கள் ரசிகர்கள் மனதில் இன்றும் இடம் பிடித்துள்ளன. குறிப்பாக "கண்ணுலா கனுல்லா" போன்ற மென்மையான பாடல்கள் இன்று வரை பட்டியல்களில் இடம்பிடிக்கின்றன.


இந்நிலையில், படம் வெளியான 6 ஆண்டுகள் நிறைவாக இருப்பதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில அரிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.




Advertisement

Advertisement