தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் நடிகர் ரஜினிகாந்த்.
இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' படம், கடந்த 14ஆம் திகதி உலகெங்கும் உள்ள பல திரையரங்குகளில் வெளியானது.
இதே நாளில் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ஏற்கனவே ஹிட் அடித்த வார் படத்தின் இரண்டாம் பாகமான "வார் 2" படமும் வெளியாகி போட்டியிட்டது.
இதனிடையே ரஜினியின் "கூலி" படத்திற்கு சென்சார் போர்டு 'A' சான்றிதழ் வழங்கியதால், பிள்ளைகளுடன் பல குடும்பங்கள் படத்தைப் பார்க்க முடியாமல் தவித்தன.
சில திரையரங்குகளில், "கூலி" படத்தைப் பார்க்க வந்த பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை "வார் 2" படத்திற்கு அனுப்பினர்.
"வார் 2" சில இடங்களில் பிள்ளைகளுக்கு மட்டுமே ஹவுஸ்புல் ஆனது. இதனால், "கூலி" படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், "கூலி" படக்குழு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
படத்தில் உள்ள சில கடுமையான வன்முறை காட்சிகளை வெட்டி, மீண்டும் சென்சார் போர்டுக்கு அனுப்ப உள்ளனர்.
இதன் மூலம், 'A' சான்றிதழ் இல்லாமல் படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியும். இதனால், பிள்ளைகளுடன் குடும்பத்தினர் இணைந்து கூலி படத்தை பார்க்க முடியும்.
மேலும், ஒரு மாதத்திற்குள் OTT ப்ளாட்ஃபார்மில் படம் வெளியாகும்.
OTT-யில் வயது வரம்பு கட்டுப்பாடு இல்லாததால், அனைவரும் பார்க்க முடியும். ஆனால், OTT வெளியீட்டிற்கு முன்பே, திரையரங்குகளில் மீண்டும் வெளியிட முயற்சி நடக்கிறது.
இந்த மாற்றம் "கூலி" படத்தின் வசூலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினியின் "ஜெயிலர்" படத்திற்குப் பிறகு, "கூலி" அவரது கேரியரில் மிக முக்கியமான படமாக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!