• Apr 20 2026

எனக்கும் விஜய்க்கும் ஏகப்பட்ட பிரச்சனை இருக்குது, ஆனாலும் வாழ்த்துக்கள்: அருண்பாண்டியன்

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

எனக்கும் விஜய்க்கும் ஏகப்பட்ட பிரச்சனை இருக்கிறது என்றும், ஆனாலும் அவருடைய அரசியல் வருகைக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் மற்றும் அருண்பாண்டியன் ஆகிய இருவரும் இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் சில விஷயங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்த செய்திகள் மற்றும் வதந்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதன் பின்னர் இருவரும் நீண்ட ஆண்டுகளாக பேசாமல் இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் ’தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவருக்கு பல திரையுலக பிரபலங்கள் தங்களது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அருண்பாண்டியன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.



அப்போது எனக்கும் விஜய்க்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன, அந்த பிரச்சனைகளில் இன்னும் சில முடிவுக்கு வராமல் கூட உள்ளது, ஆனாலும் விஜய்யின் அரசியல் வருகைக்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

விஜய்க்கும் அருண்பாண்டியனுக்கும் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்பதை அவர் கூற மறுத்துவிட்ட போதிலும் விஜய்யை வைத்து அருண்பாண்டியன் ஒரு திரைப்படம் தயாரிக்க இருந்ததாகவும் அதில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதை அடுத்து அந்த படம் டிராப் செய்யப்பட்டதாகவும் அதைத்தான் அருண்பாண்டியன் கூறுவதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement