• May 17 2026

அரசியல் வெற்றிக்காக விஜய் எடுத்த புதிய ஆயுதம்? - திருச்சியில் நடந்த சம்பவம்!

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகரும், தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவருமான விஜய் இன்று (ஏப்ரல் 19) திருச்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அரசியல் பயணத்தில் தீவிரமாக செயல்பட்டு வரும் அவர், மக்களை நேரடியாக சந்தித்து ஆதரவை திரட்டிக் கொண்டிருக்கிறார்.


இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக, திருச்சியில் உள்ள St.அந்தோணியார் தேவாலயம் சென்ற விஜய், அங்கு பக்தி உணர்வுடன் பிரார்த்தனை செய்தார். குறிப்பாக, தேவாலயத்தின் உள்ளே முட்டி போட்டு நடந்து சென்று, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக்கொண்டார் என்பது கவனத்தை ஈர்த்தது.

இந்த சம்பவம் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் அவரை நேரில் காண திரண்டதுடன், அவரது இந்த செயலை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

தற்போது அந்த வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன. 


Advertisement

Advertisement