சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்துவை சந்தித்த மீனாவின் அம்மா, சத்யாவின் காதலுக்கு ஆதரவு தர வேண்டாம் என கூறுகிறார். எனினும் முத்து அவரை சமாதானப்படுத்துகிறார்.
ஆனாலும் சிந்தாமணி மேல் உள்ள பயத்தால், சத்யாவின் உயிர்தான் முக்கியம், அவனுக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம், இந்த பொண்ணு மட்டும் வேண்டாம், அவனுக்கு தயவுசெய்து ஆதரவு தர வேண்டாம் என அழுது புலம்பி சொல்லிப் போகிறார்.
அதன்பிறகு வீட்டுக்கு வந்த முத்து, அம்மாவிடம் எதற்கு இப்போது சத்யா விஷயத்தை சொன்னாய் என மீனாவை திட்டுகிறார். ஆனாலும் அதற்குப் பிறகு அதனை பார்த்துக்கொள்ளலாம் என்று சமாதானம் ஆகிறார்கள்.
அந்த நேரத்தில் முத்து, மீனாவுக்கு புதிதாக தாலி செயின் வாங்கி கொடுக்கிறார். அதனை அண்ணாமலையிடம் காட்டி சந்தோஷப்படுகிறார். ஆனாலும் விஜயா, இந்த தாலி செயின் வாங்குவதற்கு ஒரு வருஷம் ஆகிவிட்டது, ஆனால் மனோஜுக்கு வரும் பெண் அப்படி இல்லை, குறைந்தது 500 பவுன் நகை சரி போட்டு வருவார் என்று கனவு காண்கிறார்.

இதன்போது, விஜயா வீட்டுக்கு ஹரணியின் பெற்றோர் வருகின்றனர். மேலும் இந்த சம்பந்தம் நடக்காது என்று கூறி எல்லாருக்கும் அதிர்ச்சியை கொடுக்கிறார்கள். ஏன், என்ன நடந்தது என்று கேட்க, நீங்களும் என்னிடம் பொய் சொல்லிவிட்டீர்கள் என்று எல்லோரும் அண்ணாமலையிடம் கோபப்படுகிறார்கள்.
ஆனாலும் ஒன்றும் புரியாமல் இருந்த அண்ணாமலை குடும்பத்திற்கு சுவேதா நடந்தவற்றை சொல்கிறார். அதன்படி ரோகிணியை சந்தித்ததாகவும், விவாகரத்து கிடைக்கவில்லை என்ற உண்மையையும் வீட்டாருக்கு தெரியப்படுத்துகிறார்கள். இதை கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
Listen News!