• May 17 2026

நானெல்லாம் போயஸ் கார்டன்ல வீடு வாங்கக்கூடாதா.? அரங்கில் அதிர்ந்த தனுஷின் பேச்சு

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் , போயஸ் கார்டன் வீடு குறித்து முன்பு கூறிய கருத்தால் சமூக வலைதளங்களில் பரவலான ட்ரோல்களுக்கு உள்ளான நிலையில், அதற்கு சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழாவில் நேரடியாக பதிலளித்துள்ளார்.

முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் “நானெல்லாம் போயஸ் கார்டன்ல வீடு வாங்கக்கூடாதா?” என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த பேச்சு அப்போது வைரலாகி, மீம்களாகவும் ட்ரோல்களாகவும் பரவியது.

இந்த நிலையில், சமீபத்திய நிகழ்ச்சியில் தொகுப்பாளர் RJ விஜய்  இதுகுறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தனுஷ், “நாம் அதை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதே முக்கியம்” என்று கூறினார். மேலும், விமான நிலையத்தில் ஒரு பேருந்து ஓட்டுநர் தன்னிடம் செல்ஃபி எடுத்த அனுபவத்தையும் பகிர்ந்தார்.


அந்த நபர், “உங்களின் போயஸ் கார்டன் பேச்சு என் மகனுக்கு பெரிய உந்துசக்தியாக மாறியுள்ளது. அதனால் அவன் உற்சாகமாக வேலை செய்கிறான்” என்று கூறியதாக தனுஷ் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, “அது இன்ஸ்பிரேஷனாக இருந்தாலும் சரி, மீமாக மாறினாலும் சரி,  அது எல்லாமே என்டர்டெயின்மென்ட் தான்” என அவர் கூறினார்.

இறுதியில், மீண்டும் அதே பாணியில் நானெல்லாம் போயஸ் கார்டன்ல வீடு வாங்கக்கூடாதா? என்று கூறி அரங்கையே சிரிப்பில் மூழ்கடித்துள்ளார்.

Advertisement

Advertisement