• May 17 2026

பழைய படங்களைப் பார்த்து விம்மி அழுத மோகன்லால்.. எதற்காகத் தெரியுமா?

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்த உணர்ச்சி பூர்வமான கருத்துகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது பழைய படங்களை மீண்டும் பார்க்கும் போது ஏற்படும் மனநிலையை குறித்து அவர் திறந்த மனதுடன் பேசியுள்ளார்.


அதாவது, “என்னுடைய சில பழைய படங்களை பார்க்கும் போது இப்போதும் என் கண்கள் கலங்குகிறது. காரணம், அந்த படங்களில் என்னுடன் நடித்த பலரும் இப்போது உயிருடன் இல்லை. அவர்கள் நினைவுகள் திரையில் தெரியும் போது, அதை சமாளிக்க முடியாமல் கண்ணீர் வருகிறது.” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், வாழ்க்கையின் நிலையற்ற தன்மையைப் பற்றியும் அவர் பேசினார். “நானும் ஒருநாள் போகத்தானே போகிறேன். என்னதான் மிகப்பெரிய நடிகர் என்றாலும் கூட, நானும் ஒரு சாதாரண மனிதன் தான்.” என்ற அவரது வார்த்தைகள் பலரையும் உருக்கவைத்துள்ளது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல திரையுலக பிரபலங்களும் அவரது உணர்ச்சிகளை புரிந்து கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement