• Jun 26 2025

இன்னுமொரு தேசிய விருது தனுஷிற்கு நிச்சயம் ...! படத்தின் இயக்குநர் சேகர் கம்முலா....!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் வெளியாகும்."குபேரா" திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா நேற்றய தினம் நடை பெற்றது. இந்த விழாவிலே பல பிரபலங்கள் கலந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதனை தொடர்ந்து பல விடயங்களை  பகிர்ந்தும்  கொண்டனர் . அதில் படத்தின் இயக்குநர் பேசிய விடயம் சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகின்றது .


குபேரா திரைப்படத்தினை  சேகர் கம்முலா  இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ஜூன் 20 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினரால் அறிவிப்பு விடுக்க பட்டிருந்தது. இதனை தொடர்ந்து படத்தின் வேலைகள் நிறைவடைந்த நிலையில் படத்திற்கான இசைவெளியீட்டு விழா நடைபெற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.


இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் படம் குறித்தும் ,தனுஷ் குறித்தும் பேசிய விடயம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றது .அதாவது "குபேரா திரைப்படம் நன்றாக வந்துள்ளது ,தனுஷ் இன்னுமொரு தேசிய விருதை வெல்லுவார்  என்று நினைப்பதாகவும் அவரைத் தவிர அந்த கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்க முடியாது" என்றும் கூறியிருந்தார் .


மேலும் கூறுகையில் "இது ஒரு அரசியல் திரில்லர் படம் என்றும் பான் இந்திய படமாக அமையும் என்று கூறியதுடன் தான் தனுஷை என் இதயத்தில் இருந்து நேசிப்பதாகவும் கூறிய விடயம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .











Advertisement

Advertisement