• Apr 16 2026

போயும் போயும் ஒரு திருடனை போய் கல்யாணம் கட்டிக்கிட்டேனே.. அமலாபால் புலம்பல் பதிவு..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை அமலாபால் கடந்த ஆண்டு திருமணம் செய்த நிலையில் அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார் என்பதும் இன்னும் ஓரிரு மாதங்களில் அவருக்கு குழந்தை பிறந்து விடும் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் அமலாபால் அவ்வப்போது தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வரும் நிலையில் தற்போது ஒரு புதிய வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் தனது கணவர் ஒரு உணவு திருடர் என்று அவர் செல்லமாக புலம்பியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலாபால் என்பதும் அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து அவர் நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது. தமிழ் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு உட்பட சில மொழிகளில் நடித்து வந்தவர் இயக்குனர் ஏ எல் விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணம் சில வருடங்களில் முடிவுக்கு வந்த நிலையில் சமீபத்தில் அவர் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தனது இரண்டாவது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் அமலாபால் சமீபத்தில் கர்ப்பமானார் என்பதும் அனேகமாக அவருக்கு அடுத்த மாதம் குழந்தை பிறக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு ரெஸ்டாரண்டில் தனது கணவருடன் இணைந்து ஜூஸ் குடிக்கும் வீடியோவை அமலாபால் வெளியிட்டுள்ளார். தனது கணவருக்கு ஜூஸை கொடுப்பது போல் ஏமாற்றி தான் மட்டுமே குடித்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு கட்டத்தில் அவருடைய கணவர், அமலாபால் அசந்த நேரத்தில் ஸ்ட்ராவில் ஜூஸை உறிஞ்சி குடித்து விடுகிறார். இதனால் செல்ல கோபம் அடையும் அமலாபால், ‘என் கணவர் ஒரு உணவு திருடர் போல தெரிகிறது ’என்று கேப்ஷனாக பதிவு செய்து உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement