• Apr 27 2025

சினிமாவுக்கு மட்டும் போக தெரியுதுல்ல.. இதை மட்டும் ஏன் செய்ய மாட்டேங்குறீங்க.. நடிகை ராதா

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆனால் வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து போய் படம் பார்க்கிறீர்களே, அதே போல் ஏன் ஓட்டு போட மாட்டேன் என்கிறீர்கள் என்று நடிகை ராதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

 தேர்தல் வரும் நெருங்கி வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் நேரிலும் சமூக வலைதளங்களிலும் வாக்காளர்களிடம் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த 90களில் பிரபலமான நடிகையாக இருந்த நடிகை ராதா, கமல், ரஜினி, சத்யராஜ், பிரபு, மோகன் உட்பட பல பிரபலங்களுடன் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை ராதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓட்டு போடுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தேர்தல் வரப்போகிறது, எல்லோரும் கண்டிப்பாக ஓட்டு போடுங்கள், ஓட்டு போடுவது என்பது நமது ஜனநாயக கடமை. 

ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆனால் எல்லோரும் வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து படம் பார்க்கிறீர்களே, அதேபோல் ஏன் ஓட்டு போட ஆர்வம் காட்டுவதில்லை. ஓட்டு போடுவது மட்டும் போதாது, எந்த வேட்பாளர் நல்ல வேட்பாளர் என்பதை அறிந்து அவர் மக்களுக்கு நல்லது செய்வாரா என்பதை அலசி ஆராய்ந்து ஓட்டு போட வேண்டும்.

 ஏதோ ஓட்டு போட பூத்துக்கு சென்றேன், யாரோ ஒருவருக்கு ஓட்டு போட்டேன் என்று   போடாமல் உங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் யார் நல்லவர் என்பதை அறிந்து ஓட்டு போடுங்கள். ஆனால் கண்டிப்பாக எல்லோரும் ஓட்டு போட வேண்டும் என்று நடிகை ராதா வீடியோவில் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement