• May 16 2026

நிறைமாத நிலவாக ஜொலித்த அமலாபால்...க்யூட் சிரிப்புடன் வைரலாகும் போட்டோ ஷூட்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை  அமலாபால். இவர் தமிழில் வெளியான சிந்து சமவெளி என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார். எனினும் இவரது கேரியரில்  திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது மைனா படம் தான். அதில் நடித்த அமலாபாலின் கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.


இதைத்தொடர்ந்து விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து ஹீரோயினாக வலம் வந்தார். அதன் பின்பு இயக்குனரான ஏ.எல் விஜய்யை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் அந்த வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அதன் பின்பு தனது நண்பனை காதலனாக அறிமுகம் செய்தார். அவர்களுக்கு திருமணம் முடிந்து தற்போது அமலா பால் கர்ப்பமாகவும் காணப்படுகிறார்.


இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அமலா பால் கர்ப்பகால போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். அதில் வெள்ளை நிற ஆடையில் வயிற்றில் குழந்தையோடும் சிரித்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார். தற்பொழுது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.







Advertisement

Advertisement