தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் ஒரு முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், தனது அடுத்த திரைப்படமான AK 64 குறித்த முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார். இது தல அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025-ல் வெளியான "Good Bad Ugly" திரைப்படம், அஜித் ரசிகர்களுக்காகவே தனிப்படையாக வடிவமைக்கப்பட்டிருந்ததாக பரவலாக பேசப்பட்டது. அதில் அஜித்தின் ஸ்டைலான தோற்றம், மாஸ் அப்டேட்டுகள் மற்றும் வித்தியாசமான கதைக்கரு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படம், விமர்சன ரீதியாக சில இடங்களில் கலவையான கருத்துகளை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புறம் கூற முடியாத வெற்றியைப் பெற்றது.
இப்போது அதே கூட்டணியில், "AK 64" எனப்படும் அடுத்த படம் உருவாக உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது. தற்பொழுது அஜித் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கிய AK 64 குறித்த அப்டேட்டை, இயக்குநர் ஆதிக் தனது சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், "குட் பேட் அக்லி" அஜித் ரசிகர்களுக்கான படமாக இருந்தது. ஆனால் AK 64 அனைத்து தரப்பினரும் விரும்பும் பொழுது போக்கு படமாக இருக்கும்." எனக் கூறியுள்ளார். இந்த கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!