• May 09 2025

நடிகை சமந்தா மற்றும் இயக்குநர் காதல் கிசு கிசு..! உறுதி செய்த புகைப்பட பதிவு..

Mathumitha / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நாக சைதன்யாவுடன் தனது திருமண விவாகரத்தின் பின்னர் தனக்கென ஒரு புதிய பாதையில் பயணிக்க தொடங்கினார். சமீபத்தில் நடிகை சமந்தா மற்றும் பிரபல இயக்குநர் ராஜ் நிடிமோரு காதல் தொடர்பு பற்றி பல்வேறு வதந்திகள் பரவியது.


தற்போது சமந்தா "சுபம்" என்ற படத்தை தயாரித்து உள்ளார் இந்த படம் நாளை (மே 9) ரிலீசாக இருக்கிறது. இதில் சமந்தா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சில புகைப்படங்கள் இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் காதலில் இருப்பதாக பல்வேறு கிசுகிசுக்களை ஏற்படுத்தியுள்ளது.


"New beginnings" என குறிப்பிட்டு அந்த புகைப்படங்களில் ராஜ் நிடிமோருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதன் காரணமாக இவர்களது உறவு குறித்து இணையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது இந்த புதிய தொடக்கம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement