தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு இவர் தற்போது அஜித் ,விஜய் ,சூர்யா ,ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்களுடன் கூட்டணி வைத்து நடித்து வருகின்றார். இந்த நிலையில் தற்போது இவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தனது பெரும்பாலான திரைப்படங்களின் புரொமோஷன் நிகழ்வுகளில் இவர் கலந்து கொள்வதில்லை இந்நிலையில் தற்போது இவர் நடித்த கஜானா படத்தின் புரொமோஷனுக்காக இவரை அழைத்த போது இவர் வரமறுத்துள்ளதாகவும் அவ்வாறு வருவதென்றால் 7 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் மேடையில் உண்மையை உடைத்தார்.
இந்த நிலையில் தற்போது இதற்கு நடிகர் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் இவர் மிகவும் மனமுடைந்து பேசியுள்ளார். மேலும் அவர் " சார் சொன்ன மாதிரி நான் எங்க சார் சம்பளம் பிக்ஸ் பண்றேன் என் சம்பளத்தை வெளியில இருக்கிறவங்க எல்லாரும் பிக்ஸ் பன்றாங்க ஏன் சம்பளம் எனக்கே எவ்வளவுன்னு தெரியாது. என் அசிஸ்டன்ட் என்கிட்ட ஒரு மூணு நாலு வருஷம் வேலை செய்த தம்பி ஒருத்தன் ஹீரோவா பண்ணபோறன்னு சொன்னான் ரொம்ப நல்ல விஷயம் போடா போய் பண்ணுடா அப்டின்னு சொன்னேன் அவன் அந்த படத்தில ரெண்டு நாள் நடிக்க கேட்டான் நானும் சரின்னு பண்ணி கொடுத்தன் அதுக்கு தான் 7 லட்ஷம் 8 லட்ஷம் கேட்டதா சொல்ராங்க எனக்கு எவ்வளவு பேர் இன்னமும் சம்பளம் தர வேண்டி இருக்கு தெரியுமா லிஸ்ட் எடுத்து கொடுக்கவா இப்புடி பேசாதீங்க நாங்க சப்போர்ட் பண்ணி தான் போயிட்டு இருக்கம் " என வருத்தத்துடன் கூறியுள்ளார்.
Listen News!