• Apr 16 2026

சேலை தான் பெண்களுக்கு அழகே தவிர, கிளாமர் ட்ரெஸ் இல்ல.! சர்ச்சையைக் கிளப்பிய சிவாஜி.!

shali / 3 months ago

Advertisement

Listen News!

பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி, நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘தண்டோரா’ டிசம்பர் 25 அன்று வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்வில் சிவாஜி, படம் குறித்த விவரங்களை பகிர்ந்தபோது, unexpectedly அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


குறிப்பாக, பெண்களின் உடைகள் குறித்து அவர் கூறிய கருத்துகள் பலரால் அநாகரிகமாகவும் மோசமாகவும் கருதப்பட்டு விமர்சிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் சிவாஜி பேசியபோது, தனது பார்வையில் பெண்கள் அணியும் உடைகள் குறித்த கருத்துகளை வெளிப்படுத்தினார். அவர் அதன்போது, "ஹீரோயின்கள் கண்டபடி உடைகள் அணிந்தால், நீங்கள் தான் பிரச்சனையை சந்திக்க வேண்டி இருக்கும். என்னைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், நீங்கள் எடுத்துக் கொண்டாலும் எனக்குப் பிரச்னை இல்லை. உங்கள் அழகு சேலையில் தான் உள்ளதே தவிர, அங்கங்கள் தெரியும்படி அணியும் உடைகளில் இல்லை." என்றார். 


மேலும், "அப்படியான ஆடைகளை அணிந்தீர்கள் என்றால், பார்ப்பவர்கள் வெளியே எதுவும் காட்டிக்கொள்ளாமல் சிரிப்பார்கள் தான். ஆனால் ' ஏன் இப்படியான உடைகளை அணிகிறாய்?, நல்ல உடைகளை அணியலாம் அல்லவா? நன்றாக இருப்பாயே’ என்று சொல்லத் தோன்றும். ஆனால் சொல்ல முடியாது. ஏனென்றால், பெண் சுதந்திரம் என பேசுவார்கள்." எனவும் தெரிவித்திருந்தார். 

அதுமட்டுமல்லாது, "பெண்கள் என்றால் இயற்கை. எவ்வளவு அழகாக இருக்கிறார்களோ, அவ்வளவு மரியாதை கூடும். இந்த இயற்கை அழகானது. அப்படியே பெண், என் தாய்போல அழகாக இதயத்தில் நிறைந்திருப்பார். சாவித்ரி, சௌந்தர்யா போல். இந்த தலைமுறையில் ராஷ்மிகா போன்ற பலர் இருக்கிறார்கள்."

"க்ளாமர் என்பது ஓர் அளவுவரையே இருக்க வேண்டும். அளவுக்கு மீறினால் நன்றாக இருக்காது. நான் யார் இதைச் சொல்ல? எங்களுக்குச் சுதந்திரம் இல்லை என நிறைய பேர் கிளம்பி வருவார்கள். சுதந்திரம் என்பது அதிர்ஷ்டம். அந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தாதீர்கள்."என்றும் கூறியுள்ளார். 


அவரது பேச்சை தொடர்ந்து, அவர் மரியாதை வளர்ச்சி, மொழி மற்றும் நடத்தை மூலம் சமூகத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் மதிப்பை வலியுறுத்தினார். ஆனால், சமூக வலைத்தளங்களில் பலர் இதை பெண்கள் மீது கட்டுப்பாடு விதிக்க முயற்சி என எடுத்துக் கொண்டு கண்டித்து வருகின்றனர்.

இந்தக் கருத்துகள் தற்பொழுது சமூக ஊடகங்களின் வைரலாகி வருகின்றன. இதனால், பலர் சிவாஜி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement