தமிழ் சினிமாவில் ஜித்தன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரமேஷ். இவர் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆர். பி சவுத்ரியின் மூத்த மகனும், நடிகர் ஜீவாவின் சகோதரரும் ஆவார்.
ஜித்தன் படத்திற்கு பின்பு ஒரு சில படங்களில் நாயகனாக நடித்தார். தற்போது நீண்ட நாட்கள் கழித்து அருண்ராஜ் இயக்கத்தில் உருவாகும் 'ஹிடன் கேமரா' என்ற படத்தில் நாயகனாக நடிக்க கமிட் ஆகி உள்ளார். இந்த படத்தில் கிருஷ்ணா தவா கதாநாயகியாக நடிக்கின்றார். அப்பு குட்டியும் இந்த படத்தில் நடிக்கின்றார்.
இது தொடர்பில் ஜித்தன் ரமேஷ், மீண்டும் நாயகனாக நடிப்பது மகிழ்ச்சி தருகிறது. சினிமா எனக்கு பிடித்த பயணம். இந்த பயணத்தில் தொடர்ந்து நீடித்திருப்பதும் நிலைத்திருப்பது மகிழ்ச்சி என்றார்.
மேலும் இவர் விஜய் பற்றி கொடுத்த பேட்டி தற்போது வைரலாகியுள்ளது. அதன்படி அவர் கூறுகையில்,
99 ஆவது படம் விஷாலை வைத்து பண்ணிக் கொண்டு உள்ளோம். நூறாவது படம் கண்டிப்பாக பெரிய ஹீரோவை வைத்து தான் பண்ண உள்ளோம்.
ஏற்கனவே விஜயை வைத்து பண்ண வேண்டி இருந்தது. ஆனால் அவர் அரசியலில் களம் இறங்கியுள்ளார். 98வது படத்தின் போது விஜயிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அவருக்கு கதை பிடிக்கவில்லை போல.. டவுட்டாக இருந்தார். அதன் பின்பு அவர் அரசியலில் களமிறங்கியதால் அவரை நாடவில்லை என்று தெரிவித்துள்ளார்.
Listen News!