• Sep 21 2025

சேலையில் அசத்தும் சின்னத்திரை தேவதை..! ஜனனி அசோக்குமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ் படுவைரல்.!!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

சின்னத்திரை ரசிகர்களில் பரவலாக அறியப்பட்ட நடிகை ஜனனி அசோக் குமார். சிறிது காலத்திலேயே சீரியல்கள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி கொண்டிருக்கும் இவர், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் மூலம் மீண்டும் ஒரு முறை தனது ஸ்டைலிஷ் லுக் மற்றும் பாரம்பரிய அழகை காட்டியுள்ளார்.


ஜனனி முதன்முறையாக மக்களின் கவனத்தை ஈர்த்தது 'மௌனராகம்' என்ற சீரியல் மூலம் தான். தொடர்ந்து, 'நாம் இருவர் நமக்கு இருவர்', பின்னர் 'இதயம்' போன்ற பிரபலமான தினசரி தொடர்களில் நடித்தார். 


ஜனனி தனது ரசிகர்களுடன் தனிப்பட்ட உரையாடலை தொடர்ந்து மேற்கொண்டு வருபவர். அதற்காக அவர் சமூக வலைத்தளங்களில், குறிப்பாக Instagram பக்கத்தில் அதிகமாக நேரத்தை செலவிடுவார்.

தற்போது ஜனனி பகிர்ந்துள்ள சேலை புகைப்படங்கள், இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த புகைப்படங்களில், அழகான பாரம்பரிய பரதநாட்டிய ஆபரணங்கள், மின்னும் மேக்கப், பளிச்சென்ற புன்னகையுடன் ஒளிர்கின்றார். 


இந்த புகைப்படங்கள் ஜனனியின் முந்தைய மேக்கோவர் ஷூட்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானவை. இது போன்ற பாரம்பரிய பாணியில் அவர் மிகுந்த அழகாக இருக்கிறார் என்பதே ரசிகர்களின் கருத்து.


Advertisement

Advertisement